MARC காட்சி

Back
அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்
245 : _ _ |a அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில் -
246 : _ _ |a வேணுகோபால சுவாமி
520 : _ _ |a

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்குங்கால் இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை. இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார். இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

653 : _ _ |a அம்பை கிருஷ்ணசுவாமி கோயில், வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயில், ஹரிஹர தீர்த்தம், ருக்மிணி, சத்தியபாமா, புன்னை, நித்யகல்யாணப் பெருமாள், வைகுண்ட ஏகாதசி, ஆடிசுவாதி, வைகாசி விசாகம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
902 : _ _ |a 04634-250555
905 : _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு / மதுரை நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. நவக்கிரக தோஷங்களை போக்குகின்ற தலமாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறப்புற்று விளங்கிட புதன்கிழமைகளில் பாசிப்பயிறு படைத்து வழிபடுவர். கிருஷ்ண ஜெயந்தி அன்று சுவாமிக்கு சங்கு பால் தரப்படும். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் வழங்கப்படும் இதனை அரிசியுடன் கலந்து வைத்தால் அன்னத்திற்குப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.
914 : _ _ |a 8.709317
915 : _ _ |a 77.4529868
917 : _ _ |a வேணுகோபாலகிருஷ்ணசுவாமி
918 : _ _ |a ருக்மிணி, சத்தியபாமா
922 : _ _ |a புன்னை
923 : _ _ |a ஹரிஹர தீர்த்தம்
924 : _ _ |a பாஞ்சராத்திர ஆகமம்
925 : _ _ |a விஸ்வரூபம், உச்சிக்காலம், சாயரட்சை, திருவிசாகம்
926 : _ _ |a வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஆடி சுவாதி, வைகுண்ட ஏகாதசி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் மூலவர் வேணுகோபால சுவாமி நேபாள கண்டகி தீரத்தில் உள்ள சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலவர் ருக்மிணி, சத்தியபாமாவோடு காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் இங்கு உள்ளார். இக்கோயிலின் வடபுறம் உள்ள ஹரிஹர தீர்த்தம் என்ற குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிவன், கிருஷ்ணன் ஆகியோர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணன் புல்லாங்குழலூதி நின்றபடி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயில் திருக்கதவுகள் இரண்டிலும் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
930 : _ _ |a முன்னொரு காலத்தில் சேரமன்னன் ஒருவன் திருமாலுக்கு கோயில் கட்ட விரும்பினான். அவனது கனவில் பெருமாள் சத்தியபாமா, ருக்மிணியோடு புல்லாங்குழல் இசைத்து வேணுகோபாலராக காட்சியளித்தார். ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புன்னைவனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். மன்னனும் அவ்வாறே கனவில் கண்ட காட்சிபடியே திருவுருவங்களை கோயிலில் அமைத்தான்.
932 : _ _ |a இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a அம்பை காசிப நாதர் கோயில், மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி கோயில்
935 : _ _ |a திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தின் நுழைவாயிலில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை
937 : _ _ |a திருநெல்வேலி, தென்காசி
938 : _ _ |a திருநெல்வேலி, தென்காசி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
995 : _ _ |a TVA_TMP_0000056
barcode : TVA_TMP_0000056
book category : வைணவம்
Primary File :

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_முகப்பு-0001.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_மூலவர்-0002.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_முகமண்டபம்-0003.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_திருச்சுற்று-மாளிகை-0004.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_கருவறை-விமானம்-0005.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_சுவர்-0006.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_வடபுறத்தோற்றம்-0007.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_திருச்சுற்று-மாளிகை-0008.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_கூரை-0009.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_வாகன-மண்டபம்-0010.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_கருடவாகனம்-0011.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_ஆழ்வார்கள்-0012.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_அனுமன்-0013.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_கொடிமரம்-0014.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_முகமண்டபம்-0015.jpg

TVA_TEM_000056/TVA_TEM_000056_கிருஷ்ணசுவாமி-கோயில்_கதவு-சிற்பங்கள்-0016.jpg